மக்களவைத் தேர்தலில் போட்டியா? அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

கட்சி தலைமை அறிவித்தால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும், எந்த தொகுதியிலும் போட்டியிட தயார் எனவும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.  நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை விரைவில் வெளியிடும்…

இந்தக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், மாநிலத் தலைவர்கள், இணை பொறுப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்நிலையில், சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு அவர், “கட்சி தலைமை என்னை எந்த இடத்தில், எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன். பிரச்சாரம் மேற்கொள்ள சொன்னால் பிரச்சாரம் செய்வேன். ஆனால் எனக்கான தனி விருப்பம் என்று எதுவும் கிடையாது. கட்சித் தலைமையின் முடிவு எனது முடிவு” என தெரிவித்தார்.

பின்னர், நரேந்திர மோடி குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக கேட்கப்பட்ட கேள்விக்கு, “உதயநிதி ஸ்டாலின் Background என்ன? தாத்தா பெயர் மற்றும் அப்பா பெயர் வைத்து அரசியலுக்கு வந்தவர். அவர்கள் பெயரை தூக்கி விட்டால் உதயநிதி இரண்டு ஓட்டு கூட வாங்க மாட்டார்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.