“மொழிப்பாடத் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது” – மாணவர்கள் கருத்து!

பண்ணிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மொழிப்பாட தேர்வு முடிந்த நிலையில், வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.  கடந்த மாதம் 12ம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்கப்பட்டு 17ம் தேதி…

பண்ணிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மொழிப்பாட தேர்வு முடிந்த நிலையில், வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த மாதம் 12ம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்கப்பட்டு 17ம் தேதி வரை நடைபெற்றன.  இதையடுத்து, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.  12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22 ஆத் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  இந்த தேர்வில் தமிழ்நாடு,  புதுச்சேரியைச் சேர்ந்த 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 மாணவர்கள் எழுதுகின்றனர்.  இவர்களில் 3,58,201 பேர் மாணவர்கள். 4,13,998 பேர் மாணவியர்,  மூன்றாம் பாலினத்தவர் ஒருவர்.  இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 21,875 பேரும் எழுதுகின்றனர்.

இதனையடுத்து திட்டமிட்டபடி இன்று முதல் தேர்வான மொழிப்பாடத்தேர்வு தொடங்கி முடிவடைந்துள்ளது.  இந்நிலையில் மொழிப்பாடத் தேர்வு வினாத்தாள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.  மேலும் வினாக்கள் எதுவும் வெளியிலிருந்து கேட்கப்படவில்லை  எனவும்,  எல்லா வினாக்களும் புத்தக வினாக்கள்தான் எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.  அனைவருமே தேர்ச்சி பெற்று விடுவோம் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.