“குழந்தை பரிசு வென்றால் தாயிடம் காட்ட ஆசைப்படும்.. அதுபோல, என் சகோதரிகளை சந்திக்க வந்திருக்கிறேன்” – #DeputyCM உதயநிதி ஸ்டாலின் உரை!

ஒரு பரிசு வென்றால் குழந்தை தன் தாயிடம் காட்ட ஆசைப்படுவது போல, துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் தனது சகோதரிகளை இங்கு சந்திக்க வந்துள்ளதாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை…

“If the child wins a prize, he will want to show it to his mother.. Similarly, I have come to meet my sisters” - #DeputyCM Udayanidhi Stalin's speech!

ஒரு பரிசு வென்றால் குழந்தை தன் தாயிடம் காட்ட ஆசைப்படுவது போல, துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் தனது சகோதரிகளை இங்கு சந்திக்க வந்துள்ளதாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு வாரியம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்கள் தொடர்பான அரசு நிகழ்ச்சி இன்று (செப். 30) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, ”தமிழ்நாடு துணை முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் நான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி, தமிழ்நாடு சுய உதவி குழுக்களுக்கான பெண்களை கௌரவிக்கும் விழாவில் இன்று கலந்து கொண்டுள்ளேன். ஏதேனும் ஒரு பரிசு அல்லது பட்டம் வென்றால் அதனை குழந்தை தாயிடம் தான் காட்ட ஆசைப்படும். தமிழ்நாடு துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் எனது சகோதரிகளை இங்கு சந்திக்க வந்திருக்கிறேன்.

அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகள் மகளிர் குழுக்களுக்கு ரூ.84,815 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியமைத்து 2021 முதல் தற்போது வரையில் மட்டுமே ரூ.92 ஆயிரம் கோடி மகளிர் சுய உதவி குழு கடன் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மணிமேகலை விருது தருவதை நிறுத்திவிட்டார்கள். திமுக அரசு அமைந்த பிறகு தற்போது மீண்டும் மணிமேகலை விருது வழங்கபட்டு வருகிறது. இதுதான் மகளிர் முன்னேற்றத்தில் திமுக அரசு வைத்துள்ள அக்கரைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

பெண்களுக்கு சமூக விடுதலை வேண்டும். அதேபோல் பொருளாதார விடுதலையும் வேண்டும் என சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னரே குரல் கொடுத்தவர் தான் பெரியார். அவருடைய வழியில் பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் அடுக்கடுக்கான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற உடன் நடைபெற்ற முதல் உள்ளாட்சித் தேர்தலில் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இன்று மாநகராட்சி மேயர்கள் , ஊராட்சி மன்ற தலைவிகள் என ஆயிரக்கணக்கான பெண் தலைவர்கள் பொறுப்பில் உள்ளனர். இதற்கு காரணம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். இந்தியாவுக்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு திகழ்கிறது.

எல்லா திட்டங்களிலும் சமூக நீதி முன்னிறுத்தப்பட வேண்டும் என்பதே திமுகவின் அடிப்படை கொள்கை. பெண்கள் முன்னேறி வரவேண்டும் என்ற நோக்கத்தில் தான் இத்திட்டம் அனைத்தும் செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் தொழில் முனைவோர்களாக வர வேண்டும் என திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு சுய உதவி குழுக்களுக்கு ரூ.35000 கோடி கடன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் இலக்கை தாண்டி அதிக கடன் வழங்குவோம் என்று செயல்பட்டு வருகிறோம்” இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.