வசூலில் கலக்கும் டோவினோ தாமஸின் #ARM… இத்தனை கோடி வசூலா?

ஏஆர்எம் திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ், மின்னல் முரளி உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை…

ஏஆர்எம் திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ், மின்னல் முரளி உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டோவினோ தாமஸூக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது, ஜிதின் லால் இயக்கத்தில் இவர் நடித்த  ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ (ஏஆர்எம்) திரைப்படம் ஓணம் வெளியீடாக திரைக்கு வந்தது. இப்படத்தில் டோவினோ தாமஸ் மூன்று தோற்றங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமாகியுள்ளார் கீர்த்தி ஷெட்டி.

இவர்களைத் தவிர்த்து பாசில் ஜோசப், ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, ரோகினி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். பான் இந்திய திரைப்படமாக வெளியான இந்தப் படம் இதுவரை உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.