“ஆட்சி நடத்தத் தெரியவில்லை என்றால் முதலமைச்சர் பதவி விலகிவிடுவது நல்லது” – நயினார் நாகேந்திரன்!

ஆட்சி நடத்தத் தெரியவில்லை என்றால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் முதலமைச்சர் பதவி விலகிவிடுவது நல்லது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நேற்றைய தினம் ஊர் உலகமே தீபாவளிப் பண்டிகைக்காக விழாக்கோலம் பூண்டிருந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், தேனி, மானாமதுரை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 9 கொலைகள் நடந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. கொலையானவர்களில் ஒரு காவல் சிறப்பு உதவி ஆய்வாளரும் அடக்கம் என்பது முதலமைச்சர் விஜய் அவர்களின் நிர்வாகத் தோல்விக்கான அப்பட்டமான சான்று.

பண்டிகை தினங்களில் மதுப் புழக்கம் அதிகரிக்கும், அதனால் வன்முறைகள் நிகழ வாய்ப்புள்ளன என்பதை ஒரு நல்ல அரசு முன்கூட்டியே யூகித்திருக்க வேண்டும். ரோந்துப் பணிகளையும், கண்காணிப்பு பணிகளையும் பலப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், பொதுமக்களைப் போலவே ஆட்சியாளர்களும் தீபாவளிக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் முடங்கிவிட்டால், அரசு இயந்திரம் எப்படி முறையாக இயங்கும்? அதிலும் சட்டம் ஒழுங்கை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களே, பொதுமேடையில் ‘Fun, Enjoyment’ என பகிரங்கமாக போதைப் பழக்கத்தை ஊக்குவித்தால், வன்முறைகள் குறையுமா?

எனவே தான் நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறோம், ஆட்சி நடத்தத் தெரியவில்லை என்றால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் பதவி விலகிவிடுவது நல்லது”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.