அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356-ஐ காங்கிரஸ் கட்சி தவறாக பயன்படுத்தி இருந்தால் அன்றைக்கே மக்கள் தண்டித்திருப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவித்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று பிரதமர் மோடி பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சி அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி மாநில அரசுகளை கலைத்ததாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும், இந்திரா காந்தி 356 பிரிவை பயன்படுத்தி 50 முறைகளுக்கு மேல் மாநில ஆட்சியை கலைத்திருக்கிறார் என்று மோடி கூறினார். இந்நிலையில் மோடியின் இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக ப.சிதம்பரம் கூறுகையில், “சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தவில்லை என நாங்கள் எங்கேயும் கூறவில்லை. அன்றைய சூழலில் 356ஐ பயன்படுத்த வேண்டிய சூழல் இருந்ததால் பயன்படுத்தினார்கள், அதில் தவறில்லை. 356ஐ தவறாக பயன்படுத்தி இருந்தால் அன்றைக்கே மக்கள் தண்டித்திருப்பார்கள். பாஜக அரசு எந்த அரசையும் கலைக்காமல் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறார்களே? அதைப்பற்றியும் மோடி பேசியிருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: இலங்கை திருக்கேத்தீச்சரம் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தரிசனம்!
மேலும் அவர் கூறுகையில், “பட்ஜெட் அறிவிப்பு என்பது பொருளாதாரத்திற்கும், நடைமுறைக்கும் உகந்ததல்ல. இந்த ஆண்டு உலகத்திற்கு சுபிட்சம் இருக்காது. வளர்ச்சி, வேலைவாய்ப்பு குறையும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்” என்று கூறினார்.