சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ஊதியத்தை ஏழைகளின் மருத்துவத்திற்கும், கல்விக்காகவும் வழங்குவேன் என திருச்செங்கோடு கொமதேக வேட்பாளர் ஈஸ்வரன் வாக்குறுதி அளித்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் ஈஸ்வரன் போட்டியிடுகிறார். திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி உட்பட மல்லசமுத்திரம் பகுதியில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபடார்.
அப்போது பேசிய அவர், சட்டமன்ற உறுப்பினராக தன்னை மக்கள் தேர்வு செய்தால் ஒரு மாறுபட்ட சட்ட மன்ற உறுப்பினரை நீங்கள் பார்பீர்கள் எனவும் தன் சொந்த மண்ணில் மக்களுக்கு சேவை ஆற்றவே தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடுதவாதக கூறினார். மேலும், தனது சம்பளம் முழுவதும் ஏழை மக்களின் மருத்துவத்திற்கும், கல்விக்காகவும் வழங்க இருப்பதாகவும் வாக்குறுதி அளித்தார்.







