இணக்கமான அரசு இருந்தால்தான், பல நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும் என்று காரைக்குடி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா போட்டியிடுகிறார். தேவகோட்டை அருகே உள்ள கோட்டவயல் கிராமத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் H.ராஜாவுக்கு அப்பகுதி பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
பரப்புரையில் பேசிய அவர், யார் நமக்கு பிரதிநிதியாக வரவேண்டும் என்று யோசித்து வாக்களிக்க வேண்டும் என்று கூறினார். மேலும், மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான அரசு இருந்தால்தான் பல நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும் என்று தெரிவித்தார்.







