ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என மாணவர்களும், அவரது அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
அந்த பிரமாண பத்திரத்தை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், http://www.antiragging.in அல்லது http://www.amanmovement.org என்ற இணையதளங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர், வரும் மின்னஞ்சலை கல்லூரி அல்லது பல்கலைக்கழக சிறப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
ராகிங்கில் ஈடுபட கூடாது, மீறினால் தண்டிக்கபடுவீர்கள் என பல்வேறு அறிவிப்புகள் இருந்து வந்த நிலையில், தற்போது “ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என பிரமாண பத்திரம்” தாக்கல் செய்ய அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.








