முக்கியச் செய்திகள் தமிழகம்

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்; அவகாசம் கிடைக்க வாய்ப்பு

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு அவகாசம் வழங்க ஆட்சேபனை இல்லை என உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாத காலம் அவகாசம் வழங்கக்கோரி, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாத கால அவகாசம் வழங்க முடியாது என தெரிவித்தது.

கால அவகாசம் வழங்குவதில் ஆட்சேபனை இருந்தால் மனுதாரர் தரப்பில் பிராமண பத்திரம் தாக்கல் செய்யவும் மற்றும் தேர்தலை நடத்த எவ்வளவு கால அவகாசம் தேவைபடுகிறது என்பது தொடர்பாக பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்துக்கு கால அவகாசம் வழங்குவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என மனுதாரர் சங்கர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சிகளும், நகராட்சிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அவகாசம் வழங்குவதில் ஆட்சேபம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு அவகாசம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Advertisement:
SHARE

Related posts

தமிழக பாஜக எம்எல்ஏக்களின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திரமோடி டிவிட்டர் செய்தி

Halley karthi

நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பான்மையோர் கருத்து: ஏ.கே.ராஜன்

Gayathri Venkatesan

கோவில்களில் சாதிய பாகுபாடு கடைபிடிக்க கூடாது: எம்எல்ஏ சிந்தனை செல்வன்

Vandhana