வாரிசு பட காட்சிகளைப் பார்த்து அழுதேன் என்று இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்தது. அதேபோல், வாரிசு படத்தின் ட்ரெய்லரும் கடந்த ஜனவரி 4 ஆம் தேதி வெளியாகி மில்லியன் கணக்கான பார்வைகளைக் குவித்து, யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
https://twitter.com/MusicThaman/status/1612740094468960257?t=U0v5O0NgZ5TgIkwl9GY_Yg&s=08
விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் ஃபேமிலி செண்டிமெண்ட் படமாக வாரிசு படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை பார்த்த இசையமைப்பாளர் தமன், ”வாரிசு படத்தின் எல்லா எமோஷனல் காட்சிகளையும் பார்த்து, என் இதயத்திலிருந்து அழுதேன். கண்ணீர் விலைமதிப்பற்றது. வாரிசு படம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. இந்த மிகப்பெரிய வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி அண்ணா” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.







