தமிழ் நாடு முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டானினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தார்.
மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இச்சந்திப்பில் முதலமைச்சர் விஜய்க்கு பூங்கொத்துய் கொடுத்தும் சால்வை அணிவித்தும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.” என்று தெரிவித்துள்ளார்.




