அமோனியா கசிவு: துயர சம்பவத்தால் ஆழ்ந்த வேதனை அடைந்தேன் – குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரங்கல்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நிகழ்ந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கண்ணிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் எதிர்பாரா விதமாக அம்மோனியா நச்சு வாயு கசிந்தது. இந்த விபத்தில் இரண்டுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 60க்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ‌இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நிகழ்ந்த துயர சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதை கேட்டு ஆழ்ந்த வேதனை அடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.