I.N.D.I.A. கூட்டணியின் பிரதமர் யார்? – ஜூன் 1ம் தேதி ஆலோசனை கூட்டம்!

 மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் யார் என்பது குறித்து ஜூன் 1-ம் தேதி ஆலோசிக்க  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக…

 மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் யார் என்பது குறித்து ஜூன் 1-ம் தேதி ஆலோசிக்க  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49), கடந்த மே 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு (58) நடைபெற்றது.

இதையடுத்து, 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுகின்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்தித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் :  “தேர்தல் பத்திரத்துக்கான மாற்று வழி குறித்து நாடாளுமன்றத்தில் முடிவு செய்ய வேண்டும்” – அமித்ஷா பேட்டி!

மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட தேர்தல் நிறைவடைந்ததும் ஜூன் 1-ம் தேதி I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் சார்பில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், I.N.D.I.A. கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் நிலையில், யாரை பிரதமராக அறிவிக்க வேண்டும் என்று ஆலோசிக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் சார்பில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக I.N.D.I.A. கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.