சிலம்பரசனின் திருமண பொறுப்பை கடவுளிடமே விட்டுவிட்டேன் -டி.ராஜேந்தர்

எல்லா வழக்குகளையும் தீர்க்கும் இக்கடவுளிடமே சிலம்பரசனின் திருமண சிக்கலை தீர்க்க வேண்டியுள்ளதாக டி.ராஜேந்தர் காஞ்சியில் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனத்திற்குப் பின் பேட்டி. திரைப்பட இயக்குநர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவரும் ,…

எல்லா வழக்குகளையும் தீர்க்கும் இக்கடவுளிடமே சிலம்பரசனின் திருமண சிக்கலை தீர்க்க வேண்டியுள்ளதாக டி.ராஜேந்தர் காஞ்சியில் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனத்திற்குப் பின் பேட்டி.

திரைப்பட இயக்குநர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவரும் , இலட்சிய திமுகவின் நிறுவனமான டி ராஜேந்தர் காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் மற்றும் காமாட்சி அம்மன் திருக்கோயில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்கு வருகை புரிந்த டி. ராஜேந்தர் தனது மகன் சிலம்பரசனின் ஜாதகத்தை வைத்துச் சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், தான் மறுபிறவி எடுத்துள்ளதாகவும், கடந்த முறை பீப் பாடல் பிரச்சனையின் போது இங்கு வந்து தனது குறைகளை வழக்கறுத்தீஸ்வரரிடம் கோரிக்கையாக வைத்த நிலையில், சுமுகமாக பிரச்சனை தீர்ந்தது.

இதனைத் தொடர்ந்து சிலம்பரசன் திருமணம் குறித்த கேள்விக்கு, எனக்கு எனது மனைவிக்குப் பிடித்த பெண் என்பதைத் தவிர்த்து எனது மகன் சிலம்பரசனுக்கு பிடித்த திருமகளை தேர்வு செய்யும் பொறுப்பை இந்த வழக்கறுத்தீஸ்வரிடமே விட்டு அது குறித்த கோரிக்கையை வைத்துள்ளேன். இந்த கோரிக்கையை அவர் சிறப்பாக நிறைவேற்றுவார் என்பதும், இதேபோல் சிலம்பரசன் திருமணத்தை அவரது ரசிகர்கள் உள்ளிட்ட நல் உள்ளங்கள் அனைவரும் ஆதரவுடன் விரைவில் நடக்கும் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

மேலும், மக்களுக்கு தங்கள் கையில் உள்ள வாக்கினுடைய சக்தி தெரியவில்லை. திரைப்படத் துறையின் கேட்கும் குறித்த ஆட்சியைக் குறித்து நான் பேச விரும்பவில்லை. நான் குரல் கொடுப்பதால் பலன் இல்லை மக்களுடைய எண்ணம் மாற வேண்டும். படித்தவர்கள் இளைஞர்கள் வாக்களிக்க முன்வர வேண்டும். பாமர மக்கள் தங்களுடைய வாக்கினை விலைக்குக் கொடுத்தால் வருகின்ற ஆட்சியாளர்கள் எப்படி நேர்வழியில் ஆட்சி நடத்துவார்கள் என காஞ்சிபுரத்தில் டி ஆர் பேட்டி அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.