ராஜ ராஜ சோழன் குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் வெற்றிமாறன் பற்றி பேச விரும்பவில்லை என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
எம்.எஸ்.சக்திவேல் இயக்கத்தில் ராஜாத்தி பாண்டியன், ஆரா, கோவை சரளா நடித்துள்ள
ஒன்வே திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குஷ்பு , நிகழ்ச்சி முடிந்தபின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ராஜராஜ சோழனுக்கு இந்து அடையாளங்கள் கொடுக்கப்பட்டது என இயக்குநர் வெற்றிமாறன் கூறியதைப் பற்றி கேட்டபோது, அது ஒவ்வொருவருடைய பார்வையைப் பொறுத்தது. வெற்றிமாறன் பற்றி நான் பேச விரும்பவில்லை என்றார்.
பொன்னியின் செல்வனையும் பாகுபலியையும் ஒப்பிடுவது பற்றி கேட்டபோது, தமிழ்படம் தெலுங்குப் படம் என நாம் பார்க்க வேண்டாம். அது ஒரு இந்தியப் படம். ஒரு தமிழராக இப்படியான ஒரு வரலாற்றை பதிவு செய்ததில் நாம் பெருமைப்பட வேண்டும். மணிரத்னம் ஒரு படம் செய்கிறார் என்றால் அதைப் பற்றி ஆராயாமல் செய்யமாட்டார். படத்தில் குறைகள் இருக்கிறது என சொல்பவர்கள் வரலாற்றை படித்துவிட்டு வந்து பேசுங்கள் என்று தெரிவித்தார்.
விஜய்யின் வாரிசு படத்தில் நடிக்கிறீர்களா என கேட்டபோது, வாரிசு படத்தின் ஷூட்டிங் நாங்கள் இருந்த இடத்திற்கு அருகில் நடந்தது. அதனால் அங்கு சென்றேன். அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் வெளியே வந்தது. மற்றபடி வாரிசு படத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.
பொன்னியின் செல்வன் படத்தால் தான் காஃபி வித் காதல் படம் தாமதமாகிறதா எனக் கேட்டபோது, காஃபி வித் காதல் படம் ஒரு ஃபீல் குட் படமாக, குடும்பங்கள் ரசிக்கும்படியும் உருவாகியிருக்கிறது. படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. எனவே படத்தை தாமதப்படுத்தி அடுத்த மாதம் வெளியிட இருக்கிறோம். மற்றபடி பொன்னியின் செல்வனுக்கும், காஃபி வித் காதல் படத்தின் தாமதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்தார்.