மூன்றாவது அணி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கமல்ஹாசனுடன் கூட்டணி என்று பரவிய செய்தி வதந்ததி எனத் தெரிவித்தார். இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்கப்படும் எனக் கூறிய அவர், மூன்றாவது அணி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனத் திட்டவட்டமாக கூறினார்.







