இன்று மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக அவசர ஆலோசனை கூட்டம்!

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில்,…

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், இன்று காலை 9 மணிக்கு காணொலி மூலம் நடைபெறும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்க வேண்டும். திருச்சியில் வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ள திமுக பொதுக்கூட்டம் குறித்து, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும், என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.