புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை எதிர்த்து நான் போட்டியிட தயார்… பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம்…

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில், அவரை எதிர்த்து தான் போட்டியிட தயார் என பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, டெல்லி சென்ற முன்னாள் அமைச்சர்…

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில், அவரை எதிர்த்து தான் போட்டியிட தயார் என பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, டெல்லி சென்ற முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இதனைதொடர்ந்து புதுச்சேரிக்கு திரும்பிய அவருக்கு, அவரது ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர் மாநில எல்லையில் வரவேற்பு அளித்தனர் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலகத்திற்கு வந்த நமச்சிவாயத்தை, நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர் கட்சி அலுவலகத்தில் பேசிய அவர், மத்திய அரசு மீது பழிப்போட்டு, முதலமைச்சர் நாராயணசாமி மக்களை ஏமாற்றி வருவதாக சாடினார். துணை நிலை ஆளுநர் மீதான தனிப்பட்ட ஈகோவின் காரணமாக புதுச்சேரியை போராட்ட களமாக்கியுள்ளதாகவும் குறை கூறினார். முதலமைச்சர் நாராயணசாமி எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ அதே தொகுதியில் தானும் போட்டியிட தயார்? எனக்கூறிய அவர், இதனை முதலமைச்சர் ஏற்க தயாரா? எனவும் சவால் விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply