தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா!

தனி விமானம் மூலம் மதுரை வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவிற்கு, அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரையில் நடைபெறும் பாஜக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்றிரவு வந்த ஜேபி நட்டாவிற்கு, அக்கட்சியின்…

தனி விமானம் மூலம் மதுரை வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவிற்கு, அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மதுரையில் நடைபெறும் பாஜக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்றிரவு வந்த ஜேபி நட்டாவிற்கு, அக்கட்சியின் மாநில தலைவர் எல். முருகன், தமிழக பொறுப்பாளர் சி.டி. ரவி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜை செய்யப்பட்ட மாலை, வஸ்திரங்கள் உள்ளிட்டவை ஜேபி நட்டாவிற்கு வழங்கப்பட்டது. பின்னர் திறந்தவெளி வாகனத்தில் ஏறிய ஜேபி நட்டா, தொண்டர்கள் புடை சூழ வேலம்மாள் விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply