நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவு ; தேநீர் விருந்து அளித்த சபாநாயகர் – பிரதமர் மோடி, பிரியங்கா பங்கேற்பு…!

நாடாளுமன்ற கூட்டத் தொடரின் நிறைவையொட்டி தேநீர் விருந்து மக்களவைத் தலைவர் ஓம். பிர்லா நாடாளுமன்றத்தில் உள்ள தனது அறையில் எம்.பி,களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த டிசம்பர் 1 தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் சில நாட்களில் எஸ்.ஐ.ஆர் தொடர்பாக விவாதம் நடத்த கோரி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகளில் முடங்கின. இதையடுத்து மக்களவை சபாநாயகர் ஓம். பிர்லா எத்ரிகட்சிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பலனாக உடன்பாடு எட்டியது.

இதை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தொடரில் வந்தே மாதரம் பாடலின் 150 ஆண்டு நிறைவு, வாக்காளர் தீவிரத் திருத்தம் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து இரு அவைகளிலும் விவாதங்கள் நடத்தப்பட்டன. மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்திற்கு மாற்றாக விபி – ஜி ராம் ஜி சட்ட மசோதா, காப்பீடு மசோதோ, அணுசக்தி மேம்பாட்டு மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களும் இந்த கூட்ட தொடரில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று நிறைவடைந்தது. ஒவ்வொரு கூட்டத்தொடரின் நிறைவு பெற்ற பிறகும் சபாநாயகரால் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கமாகும். அதன் படி இன்று மக்களவை சபாநாயகர்  ஓம். பிர்லா நாடாளுமன்றத்தில் உள்ள தனது அறையில் எம்.பி,களுக்கு தேநீர் விருந்து அளித்தார். இதில் வெளிநாட்டுப் பயணதை முடித்து கொண்டு நாடு திரும்பியுள்ள பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயளாலர் பிரியங்கா காந்தி திமுகவின் ஆ.ராசா உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த எம்.பிக்களும் கலந்து கொண்டனர்.

அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிரதமரின் எத்தியோப்பியா, ஜோர்டான் மற்றும் ஓமன் பயணம் குறித்து பிரியங்கா காந்தி கேட்டறிந்ததாகவும், அதே போல  தனது தொகுட்தியான வயநாட்டில் உள்ள அலர்ஜியைத் தடுக்க பயன்படுத்தும் மூலிகையை பற்றியும் பிரியங்கா காந்தி பகிர்ந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.