மனைவியை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்ய முயன்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான கோபிநாத், மதுபோதையில் மனைவி கஸ்தூரியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக, அருகே கிடந்த இரும்புக் கம்பியால், மனைவியில் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த கஸ்தூரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மனைவி கஸ்தூரியை கொலை செய்ய முயன்றதாக கோபிநாத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








