முக்கியச் செய்திகள் தமிழகம்

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு இடஒதுக்கீடு: கி.வீரமணி கோரிக்கை!

சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

 தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசுப் பணிக்கு நியமனம் செய்யும்போது முன்னுரிமை தரப்பட வேண்டியவர்களின் பட்டியலில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களைச் சேர்த்து தமிழக அரசு 1986ஆம் ஆண்டு ஆணையிட்டது. இதனை சுட்டிக்காட்டி முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய விழுப்புரம் எம்.பி ரவிக்குமார், கடந்த 5 ஆண்டுகளாக கலப்புத் திருமணம் செய்துகொண்ட எவரும் ஆசிரியர் பணியில் நியமனம் செய்யப்படவில்லை. இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உரிய ஆணை வழங்க வேண்டுமென வலியுறுத்தினார். 

இதனை முன்வைத்து இன்று அறிக்கை வெளியிட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடுகளை சுட்டிக்காட்டி,   “I.C. (Inter Caste) Quota -வில்  கலப்புத் திருமணங்களுக்கான இட ஒதுக்கீடு 5 சதவிகிதம் என்பதாக வேலை வாய்ப்பிலும் கல்வி வாய்ப்பிலும் தந்தால் அறவழியில், அமைதிப் புரட்சியாக சாதி ஒழிப்புப் பணி நடைபெற்று, நாடே சமத்துவபுரங்களாக மாறிட வாய்ப்பு ஏற்படக் கூடும்”என்று வலியுறுத்தியுள்ளார். 

இது சாதி மறுப்புத் திருமணங்கள் செய்வோருக்கு வாழ்வாதாரம் அளிப்பதாக அமையக்கூடும் என்ற கி.வீரமணி,  “சாதி மறுப்புத் திருமணங்கள் செய்பவர்களை ஆணவக் கொலையாளிகளிடமிருந்து காப்பாற்ற க்யூ  பிரான்ஞ்ச் போல  தனிப் பிரிவு அமைக்க வேண்டும். கூலிப்படைகளை வைத்து ஆணவக் கொலைகளை நடத்திடுவோருக்குக் கடும் தண்டனை தரும் வகையில் தனிச் சட்டங்களையும் இயற்ற வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தார். மேலும், திமுக ஆட்சியின் மூலமே, அதுவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்திலேயே இந்தப் புதிய சாதனை வரலாறு நிகழ்த்தப்படவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 

Advertisement:

Related posts

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 1,341 பேர் உயிரிழப்பு!

Karthick

கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இவ்வளவு பேர் பாதிப்பா?

Karthick

இந்த ஆண்டின் உலக அழகி யார்?