3 பேரை கொன்ற யானை பிடிக்கப்பட்டது!

ஓசூர் அருகே மூன்று பேரை தாக்கிக் கொன்ற காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் தனியாக சுற்றி வந்த ஆண் யானை கிராம பகுதி மக்களை அச்சுறுத்தியதோடு…

ஓசூர் அருகே மூன்று பேரை தாக்கிக் கொன்ற காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.


ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் தனியாக சுற்றி வந்த ஆண் யானை கிராம பகுதி மக்களை அச்சுறுத்தியதோடு விளைநிலங்களை சேதப்படுத்தி வந்தது.15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இதுவரை 3 பேரை தாக்கிக் கொன்ற நிலையில் 4 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் கால்நடை மருத்துவர் மூலம் காட்டு யானையானது மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. கிரேன் உதவியுடன் வாகனத்தில் ஏற்றப்பட்ட யானையை பிலிக்கல் காப்புக்காடு காவிரி ஆற்றுப்படுகையில் வனத் துறையினர் விடுவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.