முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தேர்தல் அன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு: தொழிலாளர் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் தேர்தல் தினமான ஏப்ரல் 6 ஆம் தேதி அனைத்து தொழில் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டுமென தொழிலாளர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்குமான சட்டமன்ற தேர்தல், மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான ஒரு இடைத்தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நாளான ஏப்ரல் 6-ம் தேதி பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க கடமையை நிறைவேற்ற வேண்டும். இதன்காரணமாக
தினக்கூலிகள், தற்காலிக, ஒப்பந்த பணியாளர்கள் என அனைத்து விதமான தொழிலாளர்களும் வாக்களிக்க ஏதுவாக, ஏப்ரல் 6 ஆம் தேதி, ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டுமென தொழிலாளர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் ஒரு நாள் ஊதியம் வழங்கப்பட வேண்டுமென தொழிலாளர் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram