முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

அஸ்ட்ராஜென்கா தடுப்பூசியை நிறுத்திக்கொண்ட ஐரோப்பிய நாடுகள்!

கொரோனா தொற்றுக்கு எதிராக அஸ்ட்ராஜென்கா தடுப்பூசி எடுத்துக்கொள்வதை ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் திடீரென நிறுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 11.9 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6.78 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 26.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்படும் அஸ்ட்ராஜென்கா தடுப்பூசியை மேற்குறிப்பிட்ட ஐரோப்பிய நாடுகள் திடீரென நிறுத்தியுள்ளது. ரத்தம் உறைதல் காரணமாகவே இந்த தடை ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசியை பயன்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், “இந்த தருணத்தில் மக்கள் அச்சமடைவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே அஸ்ட்ராஜென்கா தடுப்பூசியை திடீரென நிறுத்திய ஐரோப்பிய நாடுகள் மீண்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்பு குழுவும், உலக சுகாதார அமைப்பும் இணைந்து மேற்குறிப்பிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் ஒரு கலந்துரையாடலை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. பல ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து, நெதர்லாந்து மற்றும் அயர்லாந்திலும் இதே பிரச்னை காரணமாக தடுப்பூசி எடுத்துக்கொள்ளுதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில், தடுப்பூசி போடும் பணி இன்னமும் தொடங்கப்படாத நிலையில், ஐரோப்பிய நாடுகளின் நடவடிக்கை காரணமாக இந்த தொடக்க பணியை தள்ளி போடுவதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

இரத்தம் உறைதல் பிரச்னைக்கும் தடுப்பூசிக்கும் எவ்வித தொடர்பும் இதுவரை கண்டறியப்படவில்லையென உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800ஐ கடந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கூகுள் பேவில் இனி ஃபிக்ஸட் டெபாசிட் செய்யலாம்

EZHILARASAN D

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வரலாறு

EZHILARASAN D

கொலை நகரமாகும் அரக்கோணம்: அச்சத்தில் பொதுமக்கள்!

Vandhana