தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் பதினொன்றாம் தேதி வரை மிதமான மழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு ஏற்கனவே 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கனமழை காரணமாக திருச்சி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.







