முக்கியச் செய்திகள் தமிழகம்

தொடர் கனமழை எதிரொலி; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போதைய நிலவரப்படி 25 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், மெயின் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில பகுதிகள் மற்றும் தமிழகப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக இருந்தது இன்று 15 ஆயிரம் கன அடி நீர் அதிகரித்து நீர் வரத்து 25000 கன அடியாக உயர்ந்துள்ளது.

நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஒகேனக்கல் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று ஒகேனக்கல்லில் அழகை ரசித்து காவிரி ஆற்றின் ஓரத்தில் குளித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லில் வெளி மாநில மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த கணவர் கைது!

Gayathri Venkatesan

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசுக்கு வழங்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

Halley karthi

ரயில் பயணத்தின் போது செல்போனுக்கு சார்ஜ் போடத் தடை- ரயில்வே நிர்வாகம் அதிரடி!

Halley karthi