கன மழை பாதிப்பு; உதவ மத்திய அரசு தயார் – பிரதமர் மோடி உறுதி

தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பேரிடருக்காக மத்திய அரசு வழங்கிய 2020-21 ஆம்…

தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பேரிடருக்காக மத்திய அரசு வழங்கிய 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதி தீர்ந்துவிட்டது என்பது குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவித்ததாகவும், தற்போது கன மழை காரணமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/mkstalin/status/1457387911360380930

இதேபோல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் பெய்த கனமழை மற்றும் சென்னையில் ஏற்பட்ட மழை பாதிப்புக்கள் குறித்து, தொலைபேசி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்ததாக தெரிவித்துள்ளார். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அனைத்து விதமான உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருக்க தாம் பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.

https://twitter.com/narendramodi/status/1457368832729759751

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.