சென்னையில் இன்று அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகள் தவிர்த்து மற்ற அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், இடைவிடாமல் பெய்த கன மழையின் காரணமாக சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் தேங்கியதால் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.
மேலும், இன்றும் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகள் தவிர்த்து மற்ற அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.







