முக்கியச் செய்திகள் தமிழகம்

’சேவல் சண்டைக்கு அனுமதி இல்லை’

தமிழ்நாட்டில் ஜனவரி 25ஆம் தேதி வரை சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா பூலம்வலசு கிராமத்தில் சேவல் சண்டை நடத்த தடை விதிக்க கோரி பிரேம்நாத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலில் சேவல் சண்டைக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர். இதனையடுத்து சேவல் சண்டை போட்டிகள் நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்பதை பற்றியும் நீதிபதிகள் வினவினர்.

மேலும், தமிழ்நாட்டில் ஜனவரி 25ஆம் தேதி வரை எந்த ஒரு சேவல் சண்டைக்கும் அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட்டனர். சேவல் சண்டை நடத்த தடை விதிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement:
SHARE

Related posts

காவல்துறை அதிகாரியாக உதயநிதி; நெஞ்சுக்கு நீதி படத்தின் ஸ்டில்ஸ்

Arivazhagan CM

”எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றன”- பிரதமர் மோடி!

Jayapriya

மது பாட்டிலால் கழுத்தறுக்கப்பட்டு இளைஞர் கொலை; திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரங்கேறிய கொடூரம்!

Saravana