முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

கனமழை: 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், தெற்கு வங்க கடல்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கன மழை முதல் அதிகன மழை பெய்யக்கூடும் என்பதால், அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி மாவட்டங் களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுசேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரி, நாகை, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், புதுக்கோட்டை, பெரம்பலூர், தென்காசி, தஞ்சை, கள்ளக்குறிச்சி, மதுரை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, விழுப்புரம், கடலூர்,மயிலாடுதுறை, அரியலூர், திண்டுக்கல், தேனியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, நாகை, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், புதுக்கோட்டை, பெரம்பலூர், தென்காசி, தஞ்சை, கடலூர்,மயிலாடுதுறை, அரியலூர், திண்டுக்கல், தேனியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

திருப்பத்தூரில் பள்ளி மாணவனை அலைக்கழித்த வங்கி மேலாளர்!

Saravana Kumar

பேறுகால விடுப்பு : தலைமைச் செயலாளர் இறையன்பு விளக்கம்

Ezhilarasan

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கு தள்ளுபடி!

Niruban Chakkaaravarthi