தொடர் மழை காரணமாக சென்னையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், தெற்கு வங்க கடல்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதே நேரத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கன மழை முதல் அதிகன மழை பெய்யக்கூடும் என்பதால், அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள் ளது. இதற்கிடையே, தொடர் மழை காரணமாக சென்னையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.