சென்னை சவுகார்பேட்டையில் களைகட்டிய ஹோலி கொண்டாட்டம்!

சென்னை சவுகார்பேட்டையில் வடமாநிலத்தவர்கள் ஒன்றிணைந்து ஹோலி பண்டிகை கொண்டாடி ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை பூசி உற்சாகமாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். சென்னை சவுகார்பேட்டையில் மும்பை, டெல்லி, மகாராஷ்டிரா, பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்தவர்…

சென்னை சவுகார்பேட்டையில் வடமாநிலத்தவர்கள் ஒன்றிணைந்து ஹோலி பண்டிகை கொண்டாடி ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை பூசி உற்சாகமாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

சென்னை சவுகார்பேட்டையில் மும்பை, டெல்லி, மகாராஷ்டிரா, பீகார், ஜார்கண்ட்
உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்தவர் அதிகம் வசித்து வருகின்றனர். இவர்கள் அந்த பகுதியில் நகைக்கடை துணிக்கடை அலங்கார பொருட்கள் மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட கடைகளை மொத்த விற்பனை செய்யும் நிலையங்கள் வைத்து வியாபாரம் செய்கின்றனர்.

சென்னை சவுகார்பேட்டையில் முக்கிய தெருவான கொத்தவல்லி சாவடி, மின்ட் தெரு
பூக்கடைவீதி, அங்கப்பநாயக்க தெரு, யானை கவுனி, உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக வடமாநிலத்தவர்கள் உள்ளனர். வடமாநிலங்களில் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகையாகும். இன்று நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக சென்னை சவுகார்பேட்டையில் வட மாநிலத்தவர்கள் ஒன்றிணைந்து ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடியை நண்பர்கள், உறவினர்கள், சகோதர சகோதரிகள் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகத்துடனும் கொண்டாடினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.