கேரளத்தில் பாராகிளைடிங் விபத்து: மின்கம்பத்தில் சிக்கிய இருவர்

கேரளத்தில் பாராகிளைடிங் பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் ஆண், பெண் இருவர் மின்கம்பத்தில் சிக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பாராகிளைடிங் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் இங்கு…

கேரளத்தில் பாராகிளைடிங் பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் ஆண், பெண் இருவர் மின்கம்பத்தில் சிக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பாராகிளைடிங் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் இங்கு பாராகிளைடிங் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பாராகிளைடிங் செய்து கொண்டிருந்தபோது ஆண் – பெண் இருவர் நிலைதடுமாறியுள்ளனர்.

அப்போது, வர்க்கலா பகுதியின் சாலை சந்திப்பில் அமைந்துள்ள உயர்ந்த மின் கம்பத்தில் இருவரும் மோதியுள்ளனர். இதில், பாராகிளைடருடன் கம்பத்தில் ஆணும் பெண்ணும் சிக்கித் தவிதை அப்பகுதியினர் வீடியோ எடுத்துள்ளனர். இதுகுறித்து, தகவலறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து அவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

இதையும் படிக்க: மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் இன்று கட்டணமில்லை!!

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரும் சுற்றுலாப் பயணிகள் என்பதும், பாராகிளைடிங் செய்யும்போது விபத்து நேரிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.