”இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது” – ஓபிஎஸ்

இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இருமொழிக்கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளதாகவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும்…

இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இருமொழிக்கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளதாகவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்தி மொழியை கற்க நினைப்பவர்கள் தாராளமாக கற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், பேரறிஞர் அண்ணா கூறி இருப்பதாக குறிப்பிட்டு, இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நீண்டகாலமாக இருமொழிக்கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்றும், இந்தியாவில் இன்றுவரை ஆங்கிலம் இருப்பதற்கு மூலக்காரணம் பேரறிஞர் அண்ணா தான் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோதே அதிமுகவின் நிலைப்பாடு இருமொழிக்கொள்கை என தெளிவாக்கப்பட்டு விட்டதாகவும்
ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.