”ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி என அமித்ஷா கூறவில்லை”

ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மொழி என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறவில்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அம்மா மக்கள்…

ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மொழி என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறவில்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு திமுக ஆட்சியில் தான் அனுமதி கொடுக்கப்பட்டது எனவும், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மக்கள் நலன் கருதி அந்த திட்டங்களை தடுத்து நிறுத்தினார் என்றும் கூறினார்.

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியாவில் ஆங்கிலத்திற்கு மாற்றாக தான் இந்தி மொழி என அமித்ஷா கூறியதாகவும், ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மொழி என அவர் கூறவில்லை எனவும் விளக்கம் அளித்தார்.

மேலும், மத்திய அமைச்சர் அமித்ஷா ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி என கூறியதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். ”இந்தி தெரியாது போடா” என்ற ஹஷ்டாக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்து நெட்டிசன்களும் தங்களின் எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.