53 வயதான பெண்ணின் உடல் திசுக்களை, 23 வயதுடைய பெண்ணின் உடல் திசுக்களை போல் மாற்றி ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், ஒரு பெண்ணின் உடல் திசுக்களின் ஆயுளை 30 ஆண்டுகள் வரை குறைத்து சாதனை படைத்துள்ளனர். ஆராய்ச்சி செய்யப்பட்ட பெண்ணின் உடலில் உருமாற்றம் செய்யப்பட்ட அந்த திசுக்கள் மட்டும் இளமையாக செயல்படுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். 1996-ல் டாலி ஆட்டுக்குட்டி குளோனிங் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை இந்த ஆராய்ச்சிக்கும் பயன்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ஆராய்ச்சி முதல் கட்டத்தில் தான் இருக்கிறது எனவும் இதில் எதாவது வளர்ச்சிகள் ஏற்பட்டால் அதை நீரிழிவு, இதய நோய் மற்றும் நரம்பியல் நோய் போன்ற வயது தொடர்பான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம் எனவும் இதன் மூலம் மக்கள் அரோக்கியமான முறையில் முதுமை காலத்தை வாழ வழிவகை செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் முறை, புற்றுநோய் மற்றும் மரபணுக்களில் தாக்கங்களை உருவாக்கலாம் என்பதால் தற்போது மருத்துவமனைகளுக்கு இதை கொண்டு செல்ல முடியாது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தசை, கல்லீரல் மற்றும் இரத்த அணுக்கள் போன்ற மற்ற திசுக்களில் இந்த தொழில்நுட்பம் செயல்படுமா என்பதைப் பற்றிய ஆராய்சிகள் அடுத்தக்கட்டமாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.