ஹிஜாப் விவகாரம் – பாஜக முகவர் செய்ததில் தவறில்லை: பொன் ராதாகிருஷ்ணன்

மதுரை மேலூரில் வாக்களிக்க வந்த பெண்ணிடம் பாஜக முகவர் நடந்து கொண்டதில் தவறில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பாஜகவின்…

மதுரை மேலூரில் வாக்களிக்க வந்த பெண்ணிடம் பாஜக முகவர் நடந்து கொண்டதில் தவறில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு திமுக அரசு அராஜகத்தை கட்டவிழ்த்து உள்ளது.

பணபலம், அதிகார பலம், ஆள் பலம் அவற்றின் மூலமாக தங்களுக்கு எதிராக போட்டியிட்டவர்களை களத்திலிருந்து கரையேற்ற கூடிய வேலையில் ஈடுபட்டனர்.தேர்தல் ஆணையத்தின் பார்வை மாற வேண்டும். ஆளுங்கட்சி அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மேலூரில் பாஜக முகவர் செய்ததில் தவறில்லை. ஹிஜாப்பை நீக்க சொல்வது நோக்கம் அல்ல, சாதாரண பெண்களைப் போல வரவேண்டும் என்பதே விருப்பம் இதில் என்ன தவறு இருக்கிறது.தேர்தல் ஆணையம் எந்த ஒரு நபரும் முகத்தை மூடிக்கொண்டு சென்றாள் ஏற்றுக் கொள்ளுமா? அல்லது நாளை வாக்கு எண்ணிக்கையின் போது முகத்திரை அணிந்து கொண்டு சென்றால் ஏற்றுக்கொள்வார்களா? என கேள்வி எழுப்பினார்.

மேலும், விமான நிலையத்தில் முகத்திரை கழட்டி முகத்தைக் காட்டுங்கள் என தெரிவிக்கிறார்கள் அது சரியா தவறா? எனவும் சுட்டிகாட்டினார். முகவர் தன்னுடைய கடமையை தான் செய்திருக்கிறார்.

எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், அவர் சில கேள்விகள் கேட்கும்போது அதிகாரிகள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். பல இடங்களில் திருத்த முடியாத அளவுக்கு உள்ள தவறுகள நடந்துள்ளன. அந்த பிரச்சனைகள் குறித்து வழக்குப் பதிவு செய்யப்படாமலும் உள்ளது. இது சரியான தேர்தல் நடைமுறையாக தெரியவில்லை. இதற்கு, ஆளுங்கட்சியின் அழுத்தம் தான் இதன் காரணம் என நினைக்கிறேன். இவை அனைத்தையும் மீறி பாஜக மிகச்சிறந்த வெற்றியைப் பெறும் என்றார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.