தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், எடப்பாடி கோட்ட பொறியாளரை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர், எடப்பாடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட மையத்தின் முன்பு தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றாத கோட்ட நிர்வாகத்தின் போக்கினைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
இந்த ஆர்பாட்டத்தில் சாலை பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தளவாட சாமான்கள் வழங்கிட வேண்டும், விதிமுறைக்கு மாறாக வெளியிட்ட சாலை பணியாளர்களின் முதுநிலை பட்டியலை ரத்து செய்ய வேண்டும், 20 ஆண்டுகள் பணி முடித்து சிறப்பு நிலைக்கு உயர்ப்பட்டதற்கான அலுவலக ஆணையை உடனடியாக வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
—சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: