நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழியேற்பு!

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நியூஸ் 7 தமிழ் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்க நிகழ்ச்சியை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக திருவப்பூர் நகராட்சி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் பாலின…

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நியூஸ் 7 தமிழ் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்க நிகழ்ச்சியை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக திருவப்பூர் நகராட்சி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் பாலின சமத்துவ உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

திருவப்பூர் நகராட்சி அரசினர் உயர்நிலைப் பள்ளி:

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூரில் உள்ள நகராட்சி அரசினர் உயர்நிலைப் பள்ளியில், நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிப் பொறுப்புத் தலைமை ஆசிரியை சி. முத்துலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 400 மாணவர்கள் பங்கேற்றுப் பாலின சமத்துவ உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டனர். அதைத் தொடர்ந்து, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு இயக்கத்தில் ஆசிரியர்கள் கையெழுத்திட்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையம்:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது. தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் குமாரவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில், பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றி, சாதிக்க வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் குமாரவேல், பாலின சமத்துவ விழிப்புணர்வு உறுதிமொழி மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமைந்தது என்று தெரிவித்தார்.

வடக்கன்குளம் எஸ் ஏ வி பாலகிருஷ்ணா சிபிஎஸ்இ பள்ளி:

நெல்லை மாவட்டம், வடக்கன்குளம் எஸ் ஏ வி பாலகிருஷ்ணா சிபிஎஸ்இ பள்ளியில் நியூஸ் 7 தமிழின் நிகரென கொள்வோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில்800க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து நடைபெற்ற மாதவிடாய் விடுமுறை விழிப்புணர்வு இயக்கத்துக்கும் ஆதரவு தெரிவித்து அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கையெழுத்திட்டனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.