மதுரையில் வரும் திங்கள் முதல் முகக்கவசம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்டு, மாஸ்க்
அணிவது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டிருந்து. ஆனால் தற்போது ஆங்காங்கே கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருவதால் மாஸ்க் அணிவது
மீண்டும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
மதுரையில் வரும் திங்கள் முதல் முகக்கவசம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார். மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தூய்மை பணியை பார்வையிட்ட அவர், மாதம் ஒரு முறை இதுபோன்று தூய்மை பணி நடத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் வசூலிப்பது தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.








