புதுச்சேரியில் தடையை மீறி, பேனர் வைத்தது குறித்து புகார் அளிக்க சென்ற சமூக ஆர்வலர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரியில் பொது இடங்களில் பேனர் வைப்பதற்கான தடை சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை புதுச்சேரிக்கு வருகை தரவுள்ளதால், ஒதியன்சாலை காவல் நிலையம் எதிரே அமித்ஷாவை வரவேற்று, பாஜகவினர் பேனர் வைத்துள்ளனர்.

இந்த பேனரில் மோதி முதியவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தடையை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஏழுமலை என்பவரிடம் சமூக ஆர்வலர் புகார் அளிக்க சென்றபோது, அங்கு வந்த பாஜகவினர் அரசு அலுவலகத்தில் வைத்து போலீசார் முன்னிலையில் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
மேலும், அவரை ஆபாசமாக திட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகின்றது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.







