முக்கியச் செய்திகள் இந்தியா

சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, சபரிமலை கோயிலில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள், தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி கோயில் திறக்கப்பட்டது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நாள்தோறும் 45 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லையில் பதிவு செய்த பிறகே ஐயப்ப பக்தர்களுக்கு சாமி தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. முன்பதிவு செய்யாதவர்களுக்கு நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது

கோயிலுக்கு வரும் பக்தர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தியிருக்க வேண்டும், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 33 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் பதிவு செய்ததாகவும் சனிக்கிழமை 42,354 பக்தரகள் பதிவு செய்ததாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 20 கோடி ரூபாய்க்கும் மேல் கோயிலுக்கு வருவாய் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

நாடாளுமன்ற கூட்டத்தொடரிலிருந்து திரிணாமுல் எம்.பி நீக்கம்

Halley Karthik

தொழிற்சங்கத் தலைவர்கள் மீது வீண் பழி சுமத்துவதா? சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

Ezhilarasan

25-வது மாடியிலிருந்து தவறி விழுந்த சென்னை இரட்டையர்கள்

Halley Karthik