முக்கியச் செய்திகள் இந்தியா வணிகம்

இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பு

இந்தியாவில் கிரெடிட் காா்டு செலவினம் அக்டோபா் மாதம் மட்டும் ரூ.1 லட்சம் கோடி என்ற மைல்கல்லை தாண்டி சாதனை படைத்துள்ளது.

கொரோனா பரவலுக்குப் பிறகு டிஜிட்டல் மூலம் பணபர்வர்த்தனை செய்வது பொதுமக்களிடையே அதிகரித்து இருக்கிறது. இதனால் கிரெடிட் காா்டு புழக்கமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த வருடம் கிரெடிட் கார்டு புழக்கம் அதிகரித்துள்ளது. அதன் மூலமாக செய்யப்படும் செலவினங்கள் அதிகரித்து வருகிறது.

கடந்த அக்டோபா் மாதத்தில் மட்டும், 13,36,000 புதிய கிரெடிட் காா்டுகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதனால், அந்த மாதத்தில் செய்யப்பட்ட செலவினம் ரூ.1,01,200 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவித்துள்ளன. கிரெடிட் காா்டு மூலம் மேற்கொள்ளப்படும் செலவுகள் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டுவது இதுதான் முதல் முறை.

பண்டிகை கால செலவுகள் மூலமாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படு கிறது. கடந்த செப்டம்பர் மாதம் கிரெட் கார்டு பயன்பாட்டின் மூலமான செலவின ரூ.80,228 ஆக இருந்தது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங் கள் தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பதாலும் சலுகைகளை அறிவிப்பதாலும் கிரெடிட் கார்டு புழக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிய கிரெடிட் காா்டுகளை வாடிக்கையாளா்களுக்கு போட்டி போட்டு வழங்குவதில் ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி வங்கிகள் முன்னிலையில் உள்ளன.

Advertisement:
SHARE

Related posts

கொரோனாவை முழுமையாக தடுக்க, மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: ஜெ. ராதாகிருஷ்ணன்

Gayathri Venkatesan

ஷங்கர் -ராம் சரண் படத்தை ரூ.350 கோடிக்கு வாங்கியது ஜீ ஸ்டூடியோஸ்?

Halley Karthik

ஒரே நாளில் 2 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

Gayathri Venkatesan