மயிலாடுதுறையில் பலத்த மழை: 25,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் கவலை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக 25,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்தனர். தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 நாள்களுக்கு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக 25,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 நாள்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.07) பெய்த தொடர் கனமழை பெய்தது. இந்நிலையில், கனமழையால் சம்பா பயிர்கள் சாய்ந்து மழை நீரில் மூழ்கியது.

இதையும் படியுங்கள் : பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறு கருத்து- 3 அமைச்சர்கள் இடைநீக்கம்…!

அதனைத் தொடர்ந்து, தொடர் மழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் 25,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மிகவும் அதிர்ச்சி உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.