கேரளத்தில் கன மழை – இருவர் பலி; பாலருவி, கும்பாவுருட்டி அருவி மூடல்

கேரளாவில் பொழிந்து வரும் கன மழையால் இரண்டு பேர்  உயிரிழந்தனர். மழை காரணமாக பாலருவி மற்றும் கும்பாவுருட்டி அருவி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை மே 29ஆம் தேதி துவங்கியது. கேரளத்தில்…

கேரளாவில் பொழிந்து வரும் கன மழையால் இரண்டு பேர்  உயிரிழந்தனர். மழை காரணமாக பாலருவி மற்றும் கும்பாவுருட்டி அருவி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை மே 29ஆம் தேதி துவங்கியது. கேரளத்தில் தென்மேற்குப் பருவ மழை பெய்து வருகிறது. தற்போது மலையோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்கிறது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளா முழுவதும் இன்று முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. இடுக்கி, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான எல்லோ அலெர்ட் விடப்பட்டது. இன்று வயநாடு மாவட்டம் தவிர எஞ்சிய 13 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரள மாவட்டத்தில் கன மழை காரணமாக நேற்று இருவர் உயிரிழந்தனர். தென்காசி மாவட்டம், கேரள மாநில எல்லையில் உள்ள கும்பாவுருட்டி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, தொடர் கன மழையால் எதிர்பாராத விதமாக திடீர் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டதில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். உடனடியாக கேரள வனத் துறை கயிறு கட்டி அவர்களை மீட்டு வந்த நிலையில், ஈடுபாடுகளில் சிக்கி மதுரையைச் சேர்ந்த குமரன் என்பவர் பலியாகி உள்ளார். மேலும், ஒருவர் பலத்த காயங்களுடன் புனலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து, பாலருவி மற்றும் கும்பாவுருட்டி அருவி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று கேரளா வனத்துறை தெரிவித்துள்ளது.

இதேபோல, பத்தனம்திட்டா மாவட்டம், கொல்லம் விளை பகுதியில் உள்ள சப்பாத்து பாலம் வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள் தண்ணீரில்  அடித்துச் செல்லப்பட்டனர். அதில், அத்வேது (22) என்பவர் உயிரிழந்தார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.