விலைவாசி உயர்வு – நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படுமா?

விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 18ம் தேதி தொடங்கியது. கடந்த 2 வாரங்களாக நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது.…

விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 18ம் தேதி தொடங்கியது. கடந்த 2 வாரங்களாக நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது.

விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

விவாதம் நடத்த தயார் என தெரிவித்துள்ள அரசு, ஆனால், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா தொற்று சிகிச்சையில் இருப்பதால், அவர் வந்ததும் விவாதம் நடத்தலாம் என கூறியது.

கடந்த வாரத்தின் இறுதியில் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். எனினும், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பாஜக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவில்லை.

இந்நிலையில், இன்று விவாதம் நடத்த வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்களை மீண்டும் அவை நடவடிக்கையில் பங்கேற்க அனுமதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இன்று அமளியில் ஈடுபடவும் வாய்ப்பு இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.