திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை -வானிலை ஆய்வு மையம்

திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில்…

திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், சென்னைக்கு மேற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் வலுவிழந்து தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 8 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், நீலகிரி, ஈரோடு, சேலம் ,கள்ளக்குறிச்சி ஆகிய ஏழு மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கன முதல் மிக கனமழை கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளது.  கனமழையானது நீலகிரி, ஈரோடு, சேலம் ,கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பெய்ய வாய்ப்புள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.