மாண்டஸ் புயல் சேத பாதிப்புகள் தொடர்பான செய்திகளை இந்த செய்தித் தொடரில் பார்ப்போம்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் மாண்டஸ் புயல் கரையைக் கடந்த போது வீசிய பலத்த காற்று மழையில் 20க்கும் மேற்பட்ட படகுகள் ஒன்றோடு ஒன்று உரசி சேதம் அடைந்தது.
மேலும் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் மண்ணோடு மண்ணாக மணலில் புதைந்தன.
தொடர்ந்து கடற்கரையில் அலையின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது.







